Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் இருப்பதாக தான் நம்புவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ள இந்தியப் பிரஜையை 3 மாதங்கள் தடுத்து வைத்து, விசாரணை செய்யுமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
மர்சலின் தோமஸ் எனப்படும் 53 வயதுடைய குறித்த இந்தியப் பிரஜை குற்றப்புலனாய்வு திணைக்களம் ஊடாக இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டப் போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவித்து, ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல்களை ஊடகங்களிடம் வெ ளியிட்ட பின்னர், நாமல் குமாரவை சந்திப்பதற்காக, குறித்த இந்தியப் பிரஜை அவரது வீட்டுக்கு பலமுறை சென்ற இந்தியப் பிரஜை கடந்த 21ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
குறித்த இந்தியர் பல தடவைகள் நாமல் குமாரவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், எனவே குறித்த நபர் மீது சந்தேகம் இருப்பதால், தான் இது தொடர்பில் நாமல் குமார பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தமைக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago