2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்

Editorial   / 2019 ஜூன் 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதலாவது வெளிநாட்டு பயணமாக மாலைத்தீவுக்குச் சென்று, இன்று காலை  11 மணியளவில், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையடுத்தே, இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வானானது இன்று பகல் 12.15 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதுடன், மாலை 3 மணியளவில் மோடி இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமர் ​மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .