Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவொரு ரீதியிலாவது இனங்களுக்கிடையில் அல்லது மதங்களுக்கிடையில் முறுகலையோ, அமைதியின்மையையோ ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புகள், புகைப்படங்கள் அல்லது வேறு வகையில் அறிவிப்புகளை விடுக்க வேண்டாமென, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறு அறிவித்தல்களை விடுக்கும் தனிநபர்கள், அமைப்புகள், குழுக்களுக்கு எதிராக தற்போது நாட்டில் காணப்படும் அவசரகால நிலையின் கீழ் எவ்வித பராபட்சமுமின்றி சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பீ. அதபத்து தெரிவித்துள்ளார்.
அறிவிப்புகளை விடுத்து போலி அல்லது வதந்திகளைப் பரப்புவதற்காக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பை தவறாக வழிநடத்தும் வகையில் அறிவிப்புகளை விடுப்பவர்களுக்கு எதிராகவும் அவசரகால சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலிகியிருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago