2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இன்று அட்சய திருதியை: தங்கம் வாங்க போகலாமா?

S.Renuka   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்சய திருதியை இன்று புதன்கிழமை (30)  கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பதும், நாம் தொடங்கும் தொழில்கள், நமது நற்செயல்கள் பன் மடங்கு பலன் தரும் என்பதும் நம்பிக்கை. 

அதனால்தான், இந்த நாளில் மதிப்புமிக்க தங்கம் வாங்க பலரும் விரும்புகின்றனர். இதனால் பெரும்பாலான நகைக்கடைகளில் இன்று நகை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் திரண்டு செல்வார்கள்

அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தினம் தங்கம் வாங்க செல்வார்கள் என்றால் தங்கம்  விலை  என்னவென்று நோக்கலாம்... 

அதன் படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000  ரூபாவாகவும்,

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,500 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,938 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .