2026 ஜனவரி 04, ஞாயிற்றுக்கிழமை

இன்று அதிசயம் : சரமாரியாக விழப்போகும் விண்கற்கள்

Freelancer   / 2026 ஜனவரி 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் விண்கல் மழை இன்றிரவு மற்றும் நாளை இரவு நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு பிறந்த 3 நாட்களில் வானில் விண்கற்கள் சரமாரியாக விழப்போகின்றன.

'குவாட்ரான்டிட்ஸ்' (Quadrantids) எனப்படும் இந்த விண்கல் மழை, இன்று இரவு தொடங்கி 4 அதிகாலை வரை உச்சத்தில் இருக்கும்.

மேலும், நாளை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை வடகிழக்கு வானத்தில் விண்கல் மழை தெரியும்.

1 மணி நேரத்திற்கு 100 விண்கற்கள் வரை விழக்கூடும்.

அதிகாலையில் வடகிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால், நிலவின் வெளிச்சத்தையும் மீறி சில பிரகாசமான எரிநட்சத்திரங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X