J.A. George / 2021 ஜூன் 28 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று( 28) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவின் நொரகல்ல மேல் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 1 மற்றும் பின்கந்த 2 ஆகிய பகுதிகளும் பாதகட கிராம் சேவகர் பிரிவின் பின்கந்த 3 பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் ஹிதிகிவுல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நக்கலவத்த கிராமம் மற்றும் மில்லகெலே வத்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025