J.A. George / 2021 ஜூன் 30 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(30) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மொனராகலை, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தின் நியதுருபொல 1,2,3 மற்றும் 4 ஆகிய தோட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலகந்த வத்தை, கொடம்பல கிராம சேவகர் பிரிவின் கம்பேகம ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் எலதுவ கிராம சேவகர் பிரிவின் எலதுவ வத்தையும், காலி, எல்பிட்டி பொலிஸ் பிரிவின் பழைய கொலனி கிராம சேவகர்கள் பிரிவிலுள்ள திவிதுர தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

28 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
47 minute ago