2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் சூரியன் உச்சம்

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், சூரியன் இன்று (05) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரைக்கும் உச்சம் கொடுக்கும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்குத் திசையை நோக்கி சூரியன் நகர்வதால், இலங்கைக்கு உச்சம் கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், தென்மாகாணத்தில், இன்று (05) நண்பகல் 12:12க்கு உச்சம் கொடுக்கும் என்றும் ஆகையால், திக்வெல்ல, கேகந்துர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பிரதேசங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வருடத்தில் இரண்டு தடவைகள், இலங்கையைச் சூரியன் கடந்து செல்லும்; ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில், தெற்கை நோக்கி கடந்து செல்லும் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .