2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இரு உறவுகள் ஸ்திரம்: பிரதமர்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தொழிற்சங்கக் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாவோ அவர்களை அவரது விருந்தினர் இல்லமான டியவோயூடாயில் இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணிக்குச் சந்தித்தார்.

இலங்கை அரசாங்கத்துடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் உள்ள நீண்டகால நட்புறவினை வரவேற்ற சோங் தாவோ, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதனை வரவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும்  இரட்டை உறவுகளான  அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீனத் தொழிற்சங்கக் கட்சிக்கும் இடையிலான உறவு ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X