2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இராணுவ இணையத்தளம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள்

George   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, தமிழ்மிரருக்கு இன்று செவ்வாய்க்கிழமை(29) தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த வார இறுதியில் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

அனுமதியின்றி இணையத்தளத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத குழுவினர் இராணுவ இணையத்தளத்தில் இருந்த தகவல்களை சிதைக்க முற்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னர், இணையத்தளத்தில் இருந்த தகவல்களை மறுபடியும் புதுபிக்க முடிந்தாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராணு இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருந்தாக இராணுவ பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த இணைய தாக்குதலுக்கு பின்னர் இராணுவ இணையத்தளம் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X