2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இராணுவ புலனாய்வுத்தளத்துக்கு சீல்

Kanagaraj   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்தலையில் உள்ள இராணுவ புலனாய்வுத்தளம், சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இத்தளத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த தளத்திலிருந்த சகல ஆவணங்களும் இராணுவ பொலிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணை மற்றும் அதனோடிணைந்த நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாகவே இந்த தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X