Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 15 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்ததை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.
தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
இதேவேளை, தற்போது மூன்று படைபிரிவினருக்கு பயிற்சியளித்து வரும இரகசியத்தை வெளிப்படுத்திய பிரதமர், மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக கூறினார். ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டால் சர்வதேச நாடுகளின் அமைதி நடவடிக்கையில் இலங்கை படையினராயும் ஈடுபடுத்த முடியும் என்றும் இவர் கூறினார்.
இனி வரும் காலங்களில் இளம் மாணவர் படையணியை உருவாக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ருவன் விஜயவர்தன மற்றும் இராணுவ தளபதியிடம் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை முற்றாக ஒழியும் வரை கடற்படையினரின் தொகை குறைக்க முடியாது என்றும் வடக்கில் உள்ள இராணுவத்தை குறைப்பது தொடர்பில் காலகிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது உள்ள சமாதான சூழ்நிலையும் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை வைத்து படிப்படியாக வடக்கிலுள்ள இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கடற்பகுதி மற்றும் நிலப்பகுதியை இலங்கையின் முப்படையினரால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை 2002ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலை புலிகள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் எனவும் பிரதமர் கூறினார்.
7 minute ago
8 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
10 minute ago
1 hours ago