2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு பதில் அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை (23) அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன பதில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபையில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அமெரிக்காவுக்கு பயணமாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.(படங்கள்: ஜனாதிபதி செயலகம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X