Freelancer / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் இன்று (20) மதியம் திடீரென பரவிய தீ, பொதுமக்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின்சார ஒழுக்கு காரணமாக தொழிற்சாலையின் தேயிலைத் தூள் பதனிடும் அடுப்பில் இருந்து பாரிய தீ ஏற்பட்டுள்ளதால் அடுப்பு இயந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் ஆபத்துக்களோ, காயங்களோ ஏற்படவில்லை.
மதியம் இரண்டுமுறை மின்சார தடை ஏற்பட்டமையால் அடுப்புக்கான மின்சாரம் அதிகரித்த நிலையில் திடீர் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்ட மக்கள் ,தோட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர போராடிய நிலையில், நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செயற்பட்டதால் பாரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.


7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago