R.Tharaniya / 2025 நவம்பர் 09 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு அஞ்சலிக்காக வருகை தந்திருந்தனர்.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் , முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை (07)அன்று இறைபதம் அடைந்த அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் ,.அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் , பொதுமக்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறைபதம் அடைந்த அன்னார் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான சி.மூ இராசமாணிக்கம் அவர்களின் புதல்வர் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை ( 09 ) அன்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025