2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இராமர் பாதத்துக்கு பூஜை வழிபாடுகள்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அயோத்தியில் அமைக்கப்பட்டு வருகின்ற இராமர் கோவிலில், ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பிரதிஸ்டை செய்யப்படவுள்ள, இராமர் பாதம் அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு மீண்டும் இந்தயாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

.
இந்த இராமர் பாதமானது 232 இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி அயோத்தி நகருக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இராம நவமி தினத்தன்று பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே அயோத்தியில் அமைக்கப்பட்டு வருகின்ற இராமர் கோவிலில் பிரதிஸ்டை செய்வதற்காக ,சீதையம்மன் கோவிலில்  இருந்து புனித கல் அயோத்தி நகருக்கு ,இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொரகொட ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X