Editorial / 2025 ஜூன் 27 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரு துருவங்கள் வியாழக்கிழமை (26) ஒன்றிணைந்தன.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் வாசித் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷர்ரப் ஆகியோரே இவ்வாறு மக்கள் நலன் கருதி ஒன்றிணைந்தனர்.
இவர்களுக்கு இடையிலான இந்த வரலாற்று ரீதியான சிநேகபூர்வமான சந்திப்பு வியாழக்கிழமை (26) முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இடம் பெற்றது.
அச்சமயம் உலமாக்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரதித் தலைவருமான எம். ஐ .எம் .மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
அவர்களது இணைவின் பலனாக சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷர்ரப் பொத்துவில் பிரதேச சபை தவிசாளராக வெள்ளிக்கிழமை (27) தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் தவிசாளர் வாஸித் மு.கா.பாராளுமன்ற உறுப்பினராகிறார். இதனால் பொத்துவில் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த காலங்களில் பொதுவாக இருதரப்பினரும் எதிரும் புதிருமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







11 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
8 hours ago