2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இருநாட்டு பிரதிநிதிகளுக்கிடையில் அடுத்தவாரம் சந்திப்பு

Freelancer   / 2022 மே 26 , மு.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிடமிருந்து உரம் மற்றும்  மருந்துகளை பெற்றுத்தருமாறு பிரதமர் கோரவுள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார  நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் விதமாக பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் தாம் எதிர்பார்த்து நிற்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வாரம் இலங்கைக்கான சீன தூதுவரை சந்திக்கவுள்ளதாகவும்,  பீஜிங்கில் இருந்து உரம் மற்றும் நாட்டிற்கு தேவையான மருந்துகளை பெற்றுத்தருமாறு  வலியுறுத்தவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 

பூகோள மூலோபாய ரீதியில் இலங்கையில்  ஆதிக்கத்தை செலுத்த சீன மற்றும் இந்திய வல்லரசுகளின் ஆதிக்கம் இருக்கின்ற போதிலும், அதில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையிலும் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையில்  சமீபகாலமாக உணவு, எரிபொருள்,  மருந்துகள் மற்றும் நிதியுதவிகளை இந்தியா வழங்கி இலங்கைக்கு உதவி அரணாக இருந்து வருகிறது எனக் கூறியுள்ள அவர்,

இலங்கையின் தற்போதைய நிலைமையில் எது கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம். இலங்கைக்கு இப்போது உரம் அவசியப்படுகின்றது. ஆகவே அது குறித்து கூடிய கவனம் செலுத்துகின்றோம் எனவும் அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .