2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இறுதிக்கட்டப் போரில் 40,000 பேர் இறக்கவில்லை

Thipaan   / 2016 ஜனவரி 27 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்டப் போரின் இறுதி வாரங்களில், பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுவது புனைவு என 'பரணகம' ஆணைக்குழு எனப்படும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோவின் அண்மைய இலங்கை விஜயத்தின்போதும் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டதாக, மேற்படிஇ காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கைச்சாத்திடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாகவும் கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என நம்பப்படுவது புனைவு என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை என்றும் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை என்றும் எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தவிர, விசேட விசாரணை அணியொன்றினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், போரின்போது காணாமல்போனதாகக் கூறப்படுவோரின் குடும்பங்களுக்கு தகவல்களை அளிக்கவுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X