2025 ஜூலை 16, புதன்கிழமை

’இறுதி யுத்தத்தின் பேரழிவுக்கு சம்பந்தனும் மாவையுமே காரணம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

 

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், தங்க​ளது தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துவிட்டு, அமைதி காத்தனர். இதனால் தான், பேரழிவே ஏற்பட்டது. இதற்கு, இவ்விருவருமே பொறுப்பெனக் குற்றஞ்சாட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இவ்விருவருக்கும் உடந்தையாக, ஏனையவர்கள் இருந்தனரென்றும் கூறினார்.

 

யாழ்ப்பாணத்திலுள்ள சங்கரியின் அலுவலகத்தில், நேற்று (03) நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பங்காளிகளாக அல்லாமல் கூட்டாளிகளாக யார் வந்தாலும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்க்கத் தயாரென்றும் அவ்வாறு பலரும் வந்து இணைந்துகொண்டு, கூட்டாகத் தேர்தலில் போட்டியிட்டுப் பெருமளவில் வெற்றியைப் பெற்றுக் கொண்டால், தான் கட்சியையே அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளத் தயாரென்றும், அவர் மேலும் கூறினார்.

இனியும் தமிழரசுக் கட்சியை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லையெனக் கூறிய அவர், அதனால் தான் இன்றைக்கு வடக்கு முதலமைச்சராக இருக்கின்ற விக்கினேஸ்வரனை, தமிழரசுக் கட்சியில் இனியும் இணைந்துக்கொண்டு செயற்பட வேண்டாமெனத் தான் கூறியிருப்பதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .