Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுவந்த நிலையில், அப்போட்டிகளைப் பார்வையிடச் சென்ற இலங்கை இரசிகர்களை நியூசிலாந்துப் பொலிஸார், இரும்புக்கரம் கொண்டு நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், அப்போட்டியைப் பார்வையிட்ட இலங்கை இரசிகர்கள் சிலர், மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை இரசிகர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அருகில், பாதுகாப்புப் பிரிவினரும் பொலிஸாரும் நின்றிருந்ததாகவும், இலங்கை இரசிகர்களில் குறைந்தது ஆறு பேரையாவது அவர்கள் வெளியேற்றியிருந்ததாகவும், இலங்கை இரசிகரொருவர் தெரிவித்தார்.
இலங்கை இரசிகர்கள் வைத்திருந்த சிறிய தாளக் கருவிகளைக் கூட, பொலிஸார் பறித்தெடுத்தாகக் குறிப்பிட்ட நியூசிலாந்தைச் சேர்ந்த இரசிகரொருவர், சிறிய குழுவாக இருந்த இலங்கை இரசிகர்கள், போட்டிக்கான சிறந்த சூழலையே வழங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்களிடமிருந்து அக்கருவிகளைப் பறிப்பதென்பது, அதியுச்சமான நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago