Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் வியாழக்கிழமை (21) கைப்பற்றியுள்ளனர்.
இவை இந்திய விலைப்படி 22.1 மில்லியன் ரூபாய் பெறுமதிக் கொண்டவை என்றும் இதனுடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருச்சி தஞ்சாவூர் பகுதியில், இந்தியாவின் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டள்ளன.
இலங்கையிலிருந்து படகொன்றின் மூலம் இந்தியாவுக்கு தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கடல் பிரதேசத்தினூடாக கொண்டுவரப்பட்டதாகவும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப்பிரஜைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .