2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை ஹஜ்ஜாஜி மரணமடைந்துள்ளார்

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித நகரான மக்காவுக்கு ஹஜ் கடமைக்கு சென்றிருக்கும் ஹஜ்ஜாஜிகளிடையே ஏற்பட்ட நெரிசலில் நசுங்குண்டு, இலங்கை ஹஜ்ஜாஜி மரணமடைந்துள்ளார் என்று முஸ்லிம் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பைச் சேர்ந்த 56 வயதான அபுபக்கர் அப்துல் அஸிஸ் என்பவரே மரணமடைந்துள்ளதாக, சவூதிக்கு விஜயம் செய்த அவரது உறவினர்கள் என அடையாளம் காண்பித்துள்ளனர்.

இதேவேளை, அவரோடு மக்காவுக்குச் சென்று காணாமல் போன அவரது மனைவியான ரொஷான் ஹரா அப்துல் அஸிஸ் (55), இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

புனித நகரான மக்காவுக்கு ஹஜ் கடமைக்கு இலங்கையிலிருந்து 2,840 ஹஜ்ஜாஜிகள் சென்றிருந்தனர்.
மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் நசுங்குண்டு 800க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 863 பேருக்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியிலிருந்து, தனது மனைவியுடன் காணாமல் போயிருந்த நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் இவருடைய மனைவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X