2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அங்கிகா​ரம்

Editorial   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தை திருத்துவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டம், சமகால சமூக மற்றும் கலாச்சார போக்குகளை எடுத்துக்காட்டும் வகையில் காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தப்படவில்லை.

சமகால தொடர்பாடல் தொழிநுட்ப வளர்ச்சியுடன் பத்திரிகை மற்றும் வானொலிக்கு அப்பால், தொலைக்காட்சி, இணையத்தளம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புக்கள் மிகவும் துரிதமாக மக்களிடையே பரவலடைந்துள்ளது.

அதனால், மக்களுடைய வாழ்விலும் முக்கிய தாக்கங்களைச் செலுத்துகின்றன. அதற்கமைய, ஏதேனுமொரு பத்திரிகைச் செய்தியொன்று ஏதேனும் இலத்திரனியல் ஊடகத்தின் மூலம் ஒலி/ஒளிபரப்பப்பட்ட பின்னர்,

குறித்த செய்தி தொடர்பாக பத்திரிகைப் பேரவையால் நடாத்தப்படும் விசாரணையின் போது, அவ்விசாரணையின் விளைவாக தீர்மானிக்கப்பட்ட நிவர்த்தி செய்தல்/உடன்பாடு/கட்டளைகளும், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட செய்தி, இலத்திரனியில் ஊடகங்கள் வாயிலான ஒலி/ஒளிபரப்பட்ட செய்தி மற்றும் அச்சிடப்பட்ட பத்திரிகைகளில்/சஞ்சிகைகளில் இலத்திரனியல் வெளியீடுகள் அல்லது அச்சிடப்பட்ட பத்திரிகைச் செய்தி வடிவில் வெளியிடப்படும் இலத்திரனியல் பத்திரிகைகள் அல்லது சஞ்சிகை பதிவு செய்தல் மற்றும் அவை தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் பற்றிய ஏற்பாடுகளை உள்ளடக்கி வகையிலான அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கிகாரம் வழங்கியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X