Freelancer / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பொதுவான இலக்குகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மேம்பட்டு வரும் கூட்டாண்மைத் திட்டங்கள் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தேசிய தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்து-பசுபிக் பிராந்தியத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர மரியாதையுடனான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்ததாக சுட்டிக்காட்டிய ரூபியோ, இலங்கையைத் தாக்கிய கடுமையான டித்வா புயலின் பின்னர் அமெரிக்கா வழங்கிய உதவிகளை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலுக்கு பின்னர் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவானது, எமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளதை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். R
14 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago