2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ETA கட்டாயம்

J.A. George   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் கட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளது, மேலும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X