Editorial / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்களைக் காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுமடம் - மானாங்குடி சாலை கடற்கரைக்கு அருகில், புதுமடம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பைசூல் (25) என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் கிடங்கு ஒன்று உள்ளது. இந்தக் கிடங்கில் இலங்கைக்குக் கடத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், கடந்த 29.04.2026 அன்று இரவு 23:00 மணியளவில், ராமேஸ்வரம் உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் அந்தச் சிமெண்ட் கிடங்கில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, அங்கிருந்து கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:
பூச்சிக்கொல்லி மருந்துகள்: 'Ultimos' - 2,365 போத்தல்கள், 'Leokem' - 1,000 போத்தல்கள், 'Dhan Preet' - 300 போத்தல்கள் மற்றும் 'Image' பூச்சிமருந்து - 320 பெட்டிகள். அழகுசாதனப் பொருட்கள்: 'Melacare' முகப்பூச்சு (Face Cream) - 3,000 எண்ணம், 'Dermi 5' கிறீம் - 960 எண்ணம், 'Nature Power' சவர்க்காரம் – 240, 'Sunsilk' ஷாம்பு - 7,680 பக்கட்டுகள், 'Instant Bru' கோப்பித்தூள் - 3,456 பக்கட்டுகள் மற்றும் 'EVA hybrid button nut' - 60 எண்ணம்.
முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காகக் கீழக்கரை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
33 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
58 minute ago
1 hours ago