Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Simrith / 2024 மே 16 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள மற்றும் ரஷ்யா உக்ரைன் போரில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கையர்களின் சரியான எண்ணிக்கையை சரிபார்க்க அரசாங்கம் தற்போது முயற்சித்து வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஆகியோரை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"ரஷ்யாவில் தற்போது எத்தனை இலங்கையர்கள் உள்ளனர், அவர்களில் பலர் இந்தியா வழியாகவும், விசிட் விசாக்கள் மூலமாகவும் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்" என்று பாலசூரிய கூறினார், புலம்பெயர்ந்தவர்களில் சிலரை வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என நம்ப வைத்து அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என அவர் கூறினார்
600 தொடக்கம் 800 வரையான இலங்கையர்கள் தற்போது ரஷ்யாவில் இருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. "இது மனித கடத்தல், எனவே இலங்கையர்கள் அந்நாட்டிற்கு இடம்பெயர்வதை நிறுத்துவதே இதன் முதல் கட்டளை" என்று அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
3 hours ago