Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜூலை 03 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
தெற்காசிய நாடாக இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
நாங்கள் 16 வயது வரை சிறுவர்களாக பார்க்கிறோம். இதை பெரும்பாலும் இரு வெவ்வேறு வயதுக் குழுக்களாக பிரிக்கலாம். 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகள்.
அடுத்ததாக, 12-14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள்.
விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஆகியவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விபத்துகளில் அடங்கும்.
விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேராசிரியர் ருவந்தி பெரேரா சுட்டிக்காட்டினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago