2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சுகாதார மற்றும்  ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, நாட்டில் வாய்வழி புற்றுநோய் மிகவும் பொதுவாக கண்டறியப்படும் வடிவமாக உள்ளது.

புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது என்றும், மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

"புற்று நோய் மருந்துகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அவற்றின் செலவுகள் மிக அதிகம்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

30 முதல் 70 வயதுடைய இலங்கையர்களிடம் பெரும்பாலான இறப்புகளுக்கு காரணம் தொற்றா நோய்கள்(NCDs) ஏற்படுத்தும் பரந்த அச்சுறுத்தல் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

இதனால், புற்றுநோய் மற்றும் பிற தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை  நிவர்த்தி செய்ய தடுப்பு முறைகளை ஆரம்பத்திலே  கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அமைச்சர்  பொது மக்களிடம் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X