2024 மே 03, வெள்ளிக்கிழமை

இலங்கையிலிருந்து நீந்திச் சென்றவர் மரணம்

Simrith   / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கோபால் ராவ் என்ற 78 வயது முதியவர், இலங்கையின் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23, 2024) நீந்திச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பாக்கு நீரிணை வழியாக ரிலே நீச்சல் போட்டியை நடத்திய 31 நீச்சல் வீரர்களைக் கொண்ட குழுவில்  திரு. ராவ் ஒருவராவார் . நீச்சல் வீரர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு, ஏப்ரல் 22ம் திகதி இலங்கை சென்றனர். ஏப்ரல் 23ம் திகதி நள்ளிரவு 12.10 மணிக்கு இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கினர்.

வரிசையில் மூன்றாவது நீச்சல் வீரராகக் கருதப்படும் கோபால் ராவ், 3.10 மணிக்கு மார்பு வலியால் அவதிப்பட்டு, வலி குறித்து தெரிவித்துள்ளார். நீச்சல் வீரர்களுடன் வந்த படகில் அவர் உடனடியாக ஏற்றப்பட்டுள்ளார்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக, மற்ற அனைத்து நீச்சல் வீரர்களும் ரிலே நிகழ்வை ரத்து செய்துவிட்டு படகு மூலம் தனுஷ்கோடி தீவை அடைந்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராமேஸ்வரம் நகர  பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிகழ்விற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நீச்சல் வீரர்கள் குழு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .