2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

Editorial   / 2019 மே 14 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக ஜொஹான் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக கடமையாற்றி வந்த கிஷூ கோமஸ் அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, இப்புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் முகங்கொடுத்துள்ள சவாலுக்கு முகங்கொடுப்பதற்காகவும் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .