Nirosh / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, கடந்த 4 வருடங்களாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
சபாநாயகர் தலைமையிலான நேற்றை (07) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கைக் கட்டளைகள் நிறுவனம், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை எதனையும் சபைக்கு சமர்ப்பிக்கவில்லை என்றார்.
“2020ஆம் ஆண்டு கடந்த வருடம் என்பதால் பரவாயில்லை. எனினும் அதற்கு முன்னரான 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்ததோடு, முன்னாள் சபாநாயகரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கடந்த பாராளுமன்றத்திலும் தான் கொண்டுச் சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும் அவரும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தியிருந்த நிலையில், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், எனவே உடனடியாக அந்த அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago