2025 ஜூலை 12, சனிக்கிழமை

இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு எதிராக புதுடில்லியிலும் எதிர்ப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்பட்டு, பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, டில்லியில் உள்ள தென் ஆசிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தாம் ரணிலுக்கோ, மஹிந்தவுக்​​​கோ ஆதரவை தெரிவிப்பவர்கள் இல்லையென்றும் தெரிவித்துள்ள இந்த மாணவர்கள், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பவரை பிரதமராக தெரிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன்  குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கையெழுத்துக்கள் இடப்பட்ட மனுவொன்று, டில்லியில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .