2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் சீனா தலையிடாது’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் சீனா தலையிடாதென சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லு கங்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் கலந்துரையாடலை முன்னெடுப்பதன் ஊடாக இந்த அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெறலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா வெ ளிவிவகார அமைச்சில் வாராந்தம் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கையின் நிலைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லு கங்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவும் இலங்கையும் சிறந்த நட்புறவு நாடுகள் என்தால், இலங்கையின் நிலைக் குறித்து மிகவும் அவதானித்து வருகின்றோம். அதேப்போல் சீனா எப்போதும் ஏனைய நாடுகளின் உள்நாட்டு அரசியல் விடயங்களில் தலையிடாத கொள்கையைப் பின்பற்றுகின்றது. என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .