2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இலங்கையில் ’நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படும்’

Editorial   / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படும் எனத் தான் நம்புவதாக, பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (12), விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், தமிழ்ச் சமூகம் தங்கள் நாட்டுக்குச் செய்துவரும் அனைத்து விடயங்களுக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தினரின் விழுமியங்களும் தங்கள் தேசத்தின் தேசிய சுகாதாரச் சேவை, தொழில் முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், கல்விக்கு அவர்கள் வழங்குகின்ற முக்கியத்துவமும், அவர்களது கல்விச் சாதனைகளும், மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பிரதமர் பாராட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே, பிரெக்ஸிற்றைத் தாங்கள் சாத்தியமானதாக்க வேண்டும் என்றும் பிரெக்ஸிற் நிறைவேறினால், தொழில் முனைவோருக்கும் தேசிய சுகாதாரச் சேவைகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கலாம் என்பதோடு, முதலீடுகளை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரெக்ஸிற் சாத்தியமானதும், தாங்கள் தங்களதுக் குடிவரவுக் கொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள பிரித்தானியப் பிரதமர், அவுஸ்ரேலியாவில் காணப்படுவதைப் போன்ற புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட குடிவரவுக் கொள்கையை முன்வைக்கலாமென்றார்.

இது, பிரித்தானியாவுக்கு வருவதை நோக்கமாகக் கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எள்றும் இலங்கையில் நல்லிணக்கம் நிலவும் எனத் தா பெருமளவில் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பங்களுக்காகவும் தங்கள் முன்னால் இடம்பெற்ற விடயங்களுக்காகவும், பொறுப்புக்கூறல் இடம்பெறும் எனத் தான் நம்புவதாகவும் இலங்கையில் நிரந்தர அமைதி நிலவும் என எதிர்பார்ப்பதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .