2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கையில் மனித வர்த்தகம்: இந்தியாவில் ஒருவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மனித வர்த்தகத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

இந்தியாவின் இராமநாதபுரத்தை சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் (39) என்பவரே சந்தேகத்தின் பேரில்,  கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.2021 ஆம் ஆண்டு  இலங்கையர்கள் 61 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்து ஏனைய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் இவர் அனுப்பிவைக்க முயற்சித்துள்ளார்.

முகமது இம்ரான் கான் மனித கடத்தல் மட்டுமின்றி பல குற்றங்களுக்காகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் என்றும், 2021 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஈசான் என்ற நபருடன் சேர்ந்து  கனடாவில் சட்டப்பூர்வ வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் கூறி ஏமாற்றி, தமிழகத்தில் பல இடங்களில் அவர்களை தங்க வைத்துள்ளார் என்றும்   இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமன்றி ஈசன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X