Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நைன்வெல்ஸ் வைத்தியசாலையில், நீரில் சிசுவைப் பிரசவம் செய்யும் முறைமை முதல் முறையாக கையாளப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் சிசுவைப் பிரசவித்துள்ளனர் என்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இலங்கையின் முதல்முறையைாக நீரில் பிரசவம் செய்யும் முறைமையை, நைன்வெல் வைத்தியசாலையே அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நீரில் பிரசவம் செய்யும் முறைமைக்கு, குறித்த வைத்தியசாலையில் 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து சிரேஷ்ட தாதியாகப் பணியாற்றி வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணே அனைத்து வசதிகளையும் சரியான முறையில் ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக, வைத்தியசாலையின் தாதிமார் அனைவரும் தரமான பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து கர்ப்பிணத் தாய்மார்களுக்கும் இதுவொரு ஆரோக்கியமான பிரசவ முறை என்பது குறித்து தெளிவுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகி்ன்றத.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago