2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலஞ்சம் வாங்கிய பொலிஸார் இருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியில் வைத்து, 25 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பொலிஸார் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் பொலிஸ் குற்றப்பிரிவில் கடமையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவருமே, பேலியகொட குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்தியா-சென்னையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒருதொகை தங்கச் சங்கிலிகளை, விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு முயன்றார் என ​கொழும்பு-செட்டித்தெருவைச் சேர்ந்த வர்த்தகரொருவரை அச்சுறுத்தியே இவ்விருவரும், 25 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டனர் என விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .