2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இளம் குடும்பஸ்தர் கடலில் விழுந்து மரணம்

Freelancer   / 2025 ஜூலை 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். புலோலி தெற்கு கூவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் விழுந்து மரணமடைந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்  சேர்ந்த விக்னேஸ்வரன் முருகதாஸ் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தராவார். தனியார் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி குடும்பத்தார் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29)  கடலில் விழுந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. 

மாலையில் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறை பொலிஸர் நெறிப்படுத்தினர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .