2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல்: மூவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 07 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ் நகரில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்கள் என கருதப்படும் மூவர் செவ்வாய்க்கிழமை (07)  கைதுசெய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ். நகரில் நடமாடுவதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நகரில் புத்தாண்டுக்கு முன்தினமான டிசெம்பர் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.

இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டன.

கைதான மூவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X