2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இஷாராவை அழைத்து வர நேபாளம் சென்ற STF அதிகாரிகள்

Freelancer   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் நேபாளம் சென்றுள்ளனர்.

இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு உதவும் வகையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் நேபாள பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நேற்று (14) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X