2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Freelancer   / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும்  இலங்கைக்கும்  இடையிலான இருதரப்பு  உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக  திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்கும் (Dr. Ebrahim Raisi) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இருதரப்பு சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இதன் பின்னர் ஈரானுக்கும்  இலங்கைக்கும்  இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .