2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்

Editorial   / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.

கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் என 8 இடங்களை குறிவைத்து, குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 250 க்கு மேற்பட்டோர் பலியானதுடன், 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி இன்றைய தினம் காலை 8.40 மணியளவில் சகல கத்தோலிக்க மக்களும் தங்களது வீடுகளில் விளக்கேற்றுமாறும் தேவாலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்யுமாறும் பேராயர் வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்து செயற்பட்ட பலர், விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X