Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தானமாக வழங்கப்படும் சிறுநீரகம், ஈரல் மற்றும் மூளை உள்ளிட்ட மனித உடல் உறுப்புக்களை களஞ்சியப்படுத்துவதற்குரிய களஞ்சியசாலையை உருவாக்க அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
கொழும்பு - 05, ஹெவலோக்கைச் சேர்ந்த இலங்கைப் பிரஜாவுரிமை கொண்ட பெண்ணொருவரே இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கின் பிரதிவாதியாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிடப்பட்டுள்ளார்.
இரத்தம் மற்றும் கண் தானம் ஆகியன இலங்கையில் இருக்கின்றன. அவ்வாறே அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலையும் இருக்கின்றது. எனினும், சிறுநீரகம், ஈரல் மற்றும் மூளை ஆகியவற்றை தானமாக வழங்க விரும்புகின்றவர்கள் இருந்தும் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலை வசதி இல்லாமல் இருக்கின்றது.
வீதி விபத்து உள்ளிட்ட திடீர் விபத்துக்களினால் மரணத்தின் வாயில் இருப்போருக்கு இவ்வாறான உடல் உறுப்புகளை தானம் செய்யமுடியும் என்பதுடன், மேற்குறிப்பிட்ட உடல் உறுப்புகள் உபாதைகளுக்கு உள்ளானவர்களுக்கு தேவையாக உள்ளன.
எனவே, களஞ்சியசாலை வசதி இல்லாமையினால் இவற்றைப் தானமாக வழங்கமுடியாதுள்ளது என அப்பெண், தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், மனித உடல் உறுப்புக்களை தானம் வழங்குவதற்குரிய முறைமையை தயாரிக்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago