2025 ஜூலை 12, சனிக்கிழமை

உடவளவையில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடவளவ காட்டில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உடவளவ காட்டில் மிருக வேட்டையில் ஈடுபட்ட இருவரை பொலிஸ் விசேட படையணியினர் கைதுசெய்யச் சென்ற போது, சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட படையணிக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே சந்தேகநபரொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சந்தேக நபர் உடவளவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தின் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களிடமிருந்து T  56 ரக துப்பாக்கி, ரவைகள் 27 , மான் இறைச்சி மற்றும் ​கொல்லப்பட்ட மான்கள் என்பவற்றை பொலிஸ் விசேட படையணியினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .