2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானம்

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்காரணமாக, சில உணவுப்பொருட்களின் விலைகளைக் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தேநீர் 5 ரூபாவினால் இன்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாகவும், உணவுப் பொதி, கொத்து ரொட்டி என்பவற்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள  அவர், தற்போது நாட்டில் நாம் எதிர்பார்த்த சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் முடிவு மற்றும் தற்போதைய பிரதமர் மீது எமக்கு பூரண நம்பிக்கையுள்ளதாலேயே இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .