2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ’அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அரசியல்வாசிக்காக அப்பாவி நபர்களை குற்றவாளியாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.


தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட சமூகத்திலிருந்த வந்தவனான தான், பயங்கரவாதத் தாக்குதலால் படும் வேதனையை நன்கு அறிவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X