J.A. George / 2021 ஜூலை 02 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை, கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கல்வி நோக்கத்துக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான சைனோஃபார்ம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தேவையுள்ள மாணவர்கள் இன்று(02) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியாக முன்பதிவுகளை மேற்கொண்ட பின்னர், தடுப்பூசி செலுத்தப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் என்பன அலைபேசி குறுந்தகவல் ஊடாக மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள https://pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025