2025 ஜூலை 16, புதன்கிழமை

‘உலக பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டால், இலங்கையின் பொருளாதார நிலையும் மாற்றமடையும்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க மத்திய வங்கி இந்த வருடம் டிசம்பர் மாதமும், அடுத்த வருடம் 3 தடவைகளும் வட்டிமுறையை அதிகரிக்கவுள்ளதுடன், அதற்கு பிறகும் அமெரிக்க மத்திய வங்கி வட்டிமுறையை அதிகரிப்பார்கள். இவ்வாறு  அதிகரிக்கப்படுமானால் இலங்கையின் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அதனை சார்ந்த செயற்பாடுகளில் எமக்கு பிரதிகூலங்களே கிடைக்கும். எனினும் உலக பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டால், எமது நிலையும் மாற்றமடையும் என தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் லலித் சமரக்கோன் தெரிவித்தார்.

இன்று (4) ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கட்டடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மிகவும் கடினமான ஒன்றாக அமையும் என தான் நினைப்பதாகவும், ஏனெனில் இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்குரிய சில தீர்வுகள் இந்த வரவு செலவுத் திட்டத்திலேயே இருப்பதால், , முன் வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் ஊடாக, குறித்த பொருளாதார பிரச்சினைக்கு குறுகிய அல்லது நீண்ட தீர்வு தரக்கூடிய வகையில் முன்வைப்பது அவசியம் என்றும் தெரிவித்ததுடன், எம் மீது red rating agency நிறுவனம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .